''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில்பாலிவால் தெரிவித்தார்.
இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.








