
பதின் பருவ பள்ளிக் குழந்தைகள் காதலிப்பது போல பல தமிழ் திரைப்படங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இனிமேலாவது இப்படிப்பட்ட திரைப்படங்கள்
எடுப்பதை தடைசெய்யவேண்டும். பள்ளிப் பருவக் குழந்தைகள் காதலிப்பது போல
திரைப்படம் எடுப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கவேண்டும்.
ஆண்களுக்கான திருமண வயது 21, பெண்களுக்கான திருமண வயது 18 என்று சட்டம்
கூறுகிறது. சட்டத்தின் நோக்கத்தை படைப்பாளிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
பள்ளிப் பருவத்திலேயே கதலிப்பதைப் போன்ற திரைப்படங்களால் தான் குழந்தைகள்
வாழ்க்கையைப் பற்றி பக்குவம் பெறாத வயதில்
தாயாகும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதைத் தான் “Motherhood in
Childhood.” என்று கூறுகிறார்கள்.. பள்ளிப்பருவக் காதலால் திருமண வயதை
அடையாத குழந்தைகள் சிலருடைய கல்வியும் தடைபடுகிறது. இன்று பள்ளிகளில்
இப்படிப்பட்ட சிக்கல்களை ஆசிரியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.Thanks to
மக்களாட்சிக்கான கல்வி இயக்கம் FB Group
குழந்தைகளின் குறிப்பாக பதின் பருவத்தினரின் மனநலத்தைப் பாதுகாப்பது
முதன்மையானது. ஒன்றாய் கல்வி பயிலும் இரு பால் குழந்தைகளிடம் சகோதரத்துவ
உணர்வுகள் வளர்வதற்கான சூழல் பள்ளிகளில் நிலவவேண்டும்.
சமுக நலனில் அக்கறை உள்ளவர்கள் இது குறித்துப் பேசவேண்டும்.