நீட் தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 17 ஆகும்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பை 25 என நிர்ணயித்து சி.பி.எஸ்.இ. எடுத்த முடிவில் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.








