பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்ட, திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், சேலத்தில் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து, சேலம் விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில்,நடைபெற்ற விசாரணையில் பங்கேற்க பல்கலைக்கழக ஊழியர்கள் 16 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீதமுள்ளவர்களிடம் சனிக்கிழமை விசாரணை நடைபெறுகிறது. உயர்நிலைக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.








