மேஷம்
நண்பகல் 12.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில்
இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து
நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். யாரையும்
பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில்
சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன்
அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக்
கொள்ளுங்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் பாக்கிகள்
வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மிதுனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை
ஏற்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை
கட்டுக்குள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை
நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கடகம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்,
செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய
பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில்
கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
சிம்மம்
நண்பகல் 12.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட
வேண்டாம். பிற்பகல் முதல் அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கன்னி
நண்பகல் 12.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள்
எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக்
கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் பகை உண்டாகும். யாரையும்
யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற
வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
துலாம்
சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள்
பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
விருச்சிகம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில்
உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தனுசு
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று
முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.
பணப்பற்றாக்குறையை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கும்பம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்-. அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது,
விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மீனம்
நண்பகல் 12.25 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன்
வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள்
விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால்
உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்
இழந்த உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்