Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, 'கிடுக்கிப்பிடி' கேள்வி
பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை
கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம்
பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.
10ம் வகுப்பு,தமிழ்,கடினம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேற்று துவங்கி யது. தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், 3,900 மையங்களில், 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
ஒவ்வொரு பொது தேர்விலும், தமிழ் முதல் தாள், எப்போதும் எளிதாகவே இருக்கும்.
ஆனால், நேற்று தமிழ் முதல் நாள் தேர்வில், கடினமான வினாத்தாள், மாணவர்களை
தடுமாற வைத்தது.
நேரமில்லை
பாட புத்தகம் மற்றும், 'ப்ளூ பிரின்ட்' அடிப்படையில் மட்டுமே, கேள்விகள் இடம் பெற்றன. ஆனால், கேள்வியை கேட்ட
முறையில், மாணவர்கள் சோதனைக்கு ஆளாகினர். தேர்வு முடித்து வந்த பல
மாணவர்கள், '100 மதிப்பெண்ணுக்கு எழுதினாலும், 70 மதிப்பெண்ணே கிடைக்கும்'
என்றனர். சிலர், 'வினாவை புரிந்து எழுத, போதிய நேரம் இல்லை; சில கேள்விகள்
பாடத்தில் இடம் பெற்று உள்ளதா என்பதே சந்தேக மாக உள்ளது'என்றனர்.
மற்றவர்களோ, 'பாடத்தை முழுமையாக படித்ததால், அனைத்து வினாக்களுக் கும்
பதில் எழுத முடிந்தது' என்றனர். இப்படி, பல்வேறு வகை கருத்துக்களை
மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வினாத்தாள் குறித்து, கே.ஆர். மேல்நிலைப்பள்ளி, தமிழ்
ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது:பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள், தரமான
கேள்விகளை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, போட்டி தேர்வு எழுத,
மாணவர்களை தயார் செய்வது போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
கடினம்
இதை, கடினமான வினாத்தாள் என, நினைக்காமல், இது போன்ற வினாத்தாள்களை அனைத்து
வகுப்பு களுக்கும்உருவாக்க வேண்டும்.கடினமான வினாக் களையும் எதிர்கொள்ளும்
வகையில், மாணவர் களுக்கு பாடங்களை விரிவாக கற்றுத்தர வேண்டும். வெறும்
மனப்பாட கல்வி, வரும் காலத்தில் பலன் அளிக்காது என்பதை உணர்ந்து, இந்த
வினாத்தாள்
அமைக்கப்பட்டுள்ளது.ஒரு மதிப்பெண்ணில், 3, 4, 7, 8 மற்றும், 16 ஆகிய
கேள்விகள், பாடத்தின் உள்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.
இரண்டு மதிப்பெண்களில், 26, 29, 31, 32 மற்றும், 34 ஆகிய கேள்விகளும்,
நான்கு மதிப்பெண் களில், 36, 38 மற்றும், 39 ஆகிய கேள்விகளும், மாணவர்களின்
சிந்தனை திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. பாடத்தின் பின்பக்க கேள்விகள்
குறைக்கப்பட்டுள்ளன.
மாறாக, செய்யுள், உரைநடை ஆகியவற்றில், ஆசிரியர் குறிப்பு, நுால் குறிப்பு
ஆகியவற்றில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெற்றன. புத்தகத்தை புரிந்து
படித்திருந்தால், இந்த தேர்வில் முழு மதிப்பெண்ணை பெற முடியும்.இவ்வாறு
அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








