அதற்காக நமது *மாநில ஒருங்கிணைப்பாளர்* நேற்றே சென்னை சென்று *மூத்த வழக்கறிஞர்* அவர்களை சந்தித்து *வழக்கின் இறுதிகட்டம் குறித்து விவாதித்தறிந்தார்..*
சூழ்ச்சியால் 9300 + 4200 மத்திய அரசு ஆசிரியர்கள் ஊதியம் கேட்டு வழக்குத் தொடுத்த வேறொரு இயக்கம் நமது வழக்குடன் இணைத்து இருந்ததும் தெரிந்ததே. ...
அந்த வழக்கினால் இன்று *நமது வழக்கு விசாரணைக்கு எட்டுவதில் சிறு பிரச்சனை.*
இன்று காலை *நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் அவர்கள்* மாண்புமிகு நீதியரசர் முன்பு *நமது வழக்கை விரைந்து விசாரணைக்கு* உடனடியாக எடுக்கப்பட வேண்டினார்.
*அவசர வழக்காக விசாரிக்க தற்போது என்ன உடனடி தேவை..?* என மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வினவினார். அதற்கு நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் *சுமார் பத்தாயிரம் இடைநிலை ஆசிரியர்கள் முதல்முறையாக ஊதியக்குழுவையே புறக்கணித்து பழைய ஊதியத்தில் தொடர்கிறார்கள்* . . எனவே உடனடியாக வழக்கை *விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டினார்.*
ஏற்கனவே நமது வழக்கிற்கு *இறுதி வாதத்திற்கு இன்று நாள் அளிக்கப்பட்டு இருந்ததையும்* நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு சுட்டிக்காட்டினார். அதற்கு அரசு வழக்கறிஞர் அவர்கள் *நமது வழக்கில் இணைந்துள்ள இன்னொரு வழக்கில் (9300+4200) இதுவரையிலும் அரசு சார்பில் பதில்மனு சமர்ப்பிக்கப்படவில்லை* என்ற காரணத்தை முன்வைத்தார்.
அதற்கு நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் *நமது வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதை குறிப்பிட்டு நம்முடன் இணைந்த இன்னொரு வழக்கிற்கும் நமது வழக்கிற்கு சம்பந்தம் இல்லை* என்பதையும் தெளிவாக விளக்கினார். " நமது வழக்கு உடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான *சமவேலைக்கு சமஊதியம்* பெற தொடர்ந்துள்ளதையும் அடுத்தவர் *தொடர்ந்த வழக்கு மத்திய அரசு ஊதியம் கேட்டுள்ளார்கள் என்பதையும் விளக்கி கூறினார்* . .. ".
எனவே அவர்கள் வழக்குடன் நமது வழக்கை சேர்த்துவிட வேண்டாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மாண்புமிகு நீதியரசர் அவர்கள் அப்படி என்றால் *இன்று வாதத்திற்கு நமது தரப்பில் தயாரா..?* என்று கேட்டார். நமது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அவர்கள் *நமது தரப்பு எப்போதோ தயாராக இருப்பதாக..* உடனடியாக பதிலளித்தார். மாண்புமிகு நீதியரசர் அவர்களும் அப்படி என்றால் *இன்று மதியம் 2:15 பட்டியலில் விசாரணைக்கு இரண்டு வழக்கு முடிந்ததும் மூன்றாவது வழக்காக நமது வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்கள்.*
ஆனால் இன்று மதியம் 2:15 வழக்கு விசாரணையில் *முதல் வழக்கிற்கு மட்டுமே நேரம் போதுமானதாக இருந்தது. இரண்டாவது வழக்கு கூட விசாரணைக்கு எட்டப்படவில்லை.*
இறுதியாக மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வரும் *புதன்கிழமை 14/3/18 மதியம் 2:15 வழக்காக* மீண்டும் நமது வழக்கை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்கள்..
நமது *போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்* தரப்பில் வழக்கை எப்பிடியும் விரைவில் விசாரணைக்கு கொண்டு வந்து *தீர்ப்பு* பெற *அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு* வருகிறது.
நண்பர்களே. ...
*தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை. ...*
*அதைவிட்டுவிடும் வகையில் போராட்டக்குழுவும் இல்லை. .*
_விரைவில் வெற்றியின் உச்சியை நோக்கி . ...._
👉👉
*✒2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை.*
@ சென்னை.








