1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக்அறிவித்தார்.
1923 - கிறீஸ் குடியரசாகியது.
1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.
1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1965 - நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.
1972 - ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.
1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.
1999 - கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
பிறப்புகள்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
1693 -யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1776)
1733 -சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1804)
1775 -முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835)
1874 -ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க வித்தைக்காரர், நடிகர் (இ. 1926)
1884 -பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற இடச்சு-அமெரிக்க இயற்பியலாளர், வேதியியலாளர் (இ.1966)
1893 -வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (இ. 1960)
1903 -அடால்ஃப் புடேனண்ட்ட், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1995)
1905 -பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (இ. 1983)
1923 -டி. எம். சௌந்தரராஜன், தமிழகப் பின்னணிப் பாடகர்
1932 -கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2010)
1936 -டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்
1943 -ரகுநாத் மகபத்ர, இந்திய சிற்ப, கட்டடக் கலைஞர்
1949 -ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் 13வது பிரதமர்
1956 -இசுட்டீவ் பால்மர், அமெரிக்கத் தொழிலதிபர்
1965 -தி அண்டர்டேக்கர், அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்
1973 -ஜிம் பார்சன்ஸ், அமெரிக்க நடிகர்
1974 -அலிசன் ஹன்னிகன், அமெரிக்க நடிகை
1978 -கிஷோர், தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2015)
1979 -இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
இறப்புகள்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
1603 -இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)
1849 -ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (பி. 1780)
1882 -ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1807)
1905 -ழூல் வேர்ண், பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1828)
1976 -பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1887)
1980 -ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (பி. 1917)
1988 -சீர்காழி எஸ். கோவிந்தராஜன், தமிழக கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
சிறப்பு நாள்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
மர நாள் (உகாண்டா)
உலக காச நோய் நாள்
சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்








