அதே நேரம் வங்கிகள் ஆண்டின் இறுதி நாள் என்பதால் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஏப்ரல் 2ம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் வருடாந்திர கணக்கு நிறைவு என்பதால் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்
சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வங்கிகள் தொடர் விடுமுறையில் இருக்கும் என்று கூறிவந்த நிலையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திர தேவ் மார்ச் 31 சனிக்கிழமை விடுமுறை இல்லை என்று கூறினார்.
வங்கிகளும் இன்று வரை விடுமுறை உள்ளதா என்ற அறிவிப்புக்குக் காத்திருந்த நிலையில் சனிக்கிழமை எப்போதும் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.








