Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பெரிய மீனை விட்டுவிட்டு சின்ன மீனைப் பிடிக்கலாமா? - வாய்ப்பு என்பது வரம்... விவரிக்கும் கதை! #MotivationStory
பெரிய மீனை விட்டுவிட்டு சின்ன மீனைப் பிடிக்கலாமா? - வாய்ப்பு என்பது வரம்... விவரிக்கும் கதை! #MotivationStory
`ஒரு வாய்ப்பை நழுவவிடுவதைவிட மிகப் பெரிய இழப்பு வேறு எதுவுமில்லை' -
அருமையான விஷயத்தை எளிமையாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளர்
ஹெச்.ஜாக்சன் பிரௌன் ஜூனியர் (H.Jackson Brown Jr.). நம் முன்னேற்றத்துக்கு
உதவும், சாதிக்க உறுதுணையாக இருக்கும் எத்தனையோ அற்புதமான வாய்ப்புகள் நம்
வீடு தேடி வந்திருக்கும். `இது எனக்கானதில்லை', `அது எனக்கானதில்லை' என்று
ஒவ்வொன்றாக அவற்றை ஒதுக்கியிருப்போம். பிடிவாதமாக ஏதோ ஒன்றுக்காகக்
காத்திருப்போம். இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அதன் வாய்ப்பின் அருமை
நமக்குப் புரியாதது; மற்றொன்று, அதைப் பயன்படுத்தத் தெரியாதது. நம்மில்
பலர் அரிய வாய்ப்புகளைத் தவறவிடுவது இரண்டாவது காரணத்தால்தான். ஏன்?
எளிமையான விளக்கம் சொல்கிறது இந்தக் கதை.
நீயூசிலாந்திலிருக்கும் சின்ன ஊர் அது. ஜானும் ஜேம்ஸும் பக்கத்து
பக்கத்து வீட்டுக்காரர்கள். ஜேம்ஸ், அங்கே குடிவந்து இரண்டு மாதங்கள்தான்
ஆகின்றன. இருவருக்குமே ஓய்வாக இருக்கும் நேரத்தில் அருகிலிருக்கும்
ஏரிக்குப் போய் மீன் பிடிப்பது பிடிக்கும். ஆனால், இருவரும் ஒன்றாகப் போய்
மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காமலேயே இருந்தது. அந்த
நாளும் வந்தது.
இருவரும் அவரவர் தூண்டில், பிடிபடும் மீன்களை பத்திரப்படுத்த ஐஸ்
பெட்டிகள், மற்ற துணைக்கருவிகள், அவர்களுக்கான சிறு ஸ்நாக்ஸ்
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அவரவர் வேலை, குடும்பம்,
பொது விஷயங்கள் எல்லாவற்றையும் பேசியபடி ஏரிக்கரைக்குப் போய்ச்
சேர்ந்தார்கள். சற்று இடைவெளிவிட்டு, தனித்தனியே அமர்ந்து தூண்டில்போட்டு
மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
ஜான் தூண்டிலைப் போட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பெரிய மீன் பிடிபட்டது.
அவன் சத்தமாகச் சொன்னான்... ``ஜேம்ஸ்... நான் அதிர்ஷ்டக்காரன். எனக்குப்
பெரிய மீன் கிடைச்சிடுச்சு...'' பிறகு அந்த மீனைப் பிடித்து தான் கொண்டு
வந்திருந்த ஐஸ் பெட்டியில் போட்டு பத்திரப்படுத்தினான். சற்று நேரத்தில்
மேலும் சில சின்ன மீன்களும் அவனுக்குக் கிடைத்தன. அத்தனையையும் ஐஸ்
பெட்டிக்குள் போட்டான். `அவ்வளவுதான்... இனி கிளம்பிவிடவேண்டியதுதான்' என்ற
முடிவுக்கும் வந்திருந்தான். ஆனால், நண்பனோடு வந்திருக்கிறானே...
விட்டுவிட்டுப் போக முடியுமா? எனவே, ஜேம்ஸின் அருகிலமர்ந்து வேடிக்கை
பார்க்க ஆரம்பித்தான். மேலும், ஒரு மணி நேரம் கழிந்தது. ஜேம்ஸின்
தூண்டிலில் ஒரு மீன்கூட சிக்கவில்லை.
``ஏன்... ஜேம்ஸ் தூண்டில்ல இரை இருக்கானு பாரு?''
ஜேம்ஸ் தூண்டிலை இழுத்துப் பார்த்தான். இரை இருந்தது. மறுபடியும் தூண்டிலைத் தண்ணீருக்குள் விட்டான்.
மேலும் ஐந்து நிமிடங்கள் கழிந்தன. ``ஜேம்ஸ்... நான் வேணா உனக்கு ஹெல்ப்
பண்ணட்டுமா? என் தூண்டிலைப் போடுறேன். மீன் கிடைச்சா நீயே எடுத்துக்கோ!''
``வேணாம் ஜான். இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் மீன் சிக்கிரும். நீ
வேணும்னா கெளம்பேன். நான் பின்னாலேயே வந்துடுறேன்...'' ஜான், அதற்கு
பதிலேதும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
சரியாக பத்தே நிமிடங்கள்... ஜேம்ஸின் தூண்டிலில் ஒரு பெரிய மீன்
மாட்டியது. அதைப் பிடித்த ஜேம்ஸ், மறுபடியும் அந்தப் பெரிய மீனைத்
தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டான். இதைப் பார்த்து குழம்பிப் போனான் ஜான்.
சற்று நேரத்தில் இன்னொரு பெரிய மீனும் கிடைத்தது. அதையும் திரும்ப ஏரித்
தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டான். அதற்குப் பிறகும் பெரிய மீன்கள்
வரிசையாக தூண்டிலில் மாட்டிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் நீருக்குத்
திருப்பியனுப்பிக்கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
ஒரு கட்டத்தில் கத்திவிட்டான் ஜான். ``ஏன் பெரிய மீன் கிடைச்சா திரும்பத் தண்ணிக்குள்ளேயே விடுறே?''
``அதுவா? என் வீட்டுல இருக்குற வாணலி கொஞ்சம் சின்னது. இவ்வளவு பெரிய மீனை அதுல போட்டு வறுக்கவோ, சமைக்கவோ முடியாது.''
இதைக் கேட்டு ஒரு கணம் திகைத்துப் போனான் ஜான். பிறகு சொன்னான்...
``சின்ன வாணலியாவோ, பாத்திரமாவோ இருந்துட்டுப் போகட்டும். மீனை
முழுசாத்தான் சமைக்கணுமா என்ன... நறுக்கி சமைக்கலாம்ல?''
***
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








