Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை
மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில்
புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ரிஷபம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று
முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று
தீரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மிதுனம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மனதிற்கு இதமான செய்தி
வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பழைய கடனைப் பற்றி
அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது
பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
சிம்மம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.
மனைவிவழியில் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு,
மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
கன்னி
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும்.
கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும்,
செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். சிலர் உதவுவதை போல்
உபத்திரவம் தருவார்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
துலாம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல்
அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.
வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
விருச்சிகம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டை
விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால்
வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
தனுசு
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு
முக்கியத்துவம் தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில்
புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
மகரம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள்
எடுப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பணப்புழக்கம்
கணிசமாக உயரும்-. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில்
வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண்
பழி சுமத்துவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அசைவ உணவுகளை
தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் தர்மசங்கடமான சூழல்களுக்கு
ஆளாவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மீனம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர
வகையில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








