இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி!!!
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
தமிழகத்தில் உள்ள,
சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி
கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
2010 முதல், இத்திட்டம்
நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை
சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை
பிறப்பித்து உள்ளார்.







