ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் இல்லாததால் 29க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொடக்ககல்வி ஆசிரியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கிளனர். 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள ஆசிரியர்களுக்கு எந்த வசதிகளும் செய்து தராமல், அவர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனுமதியுடன் ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாத காரணத்தினால் 29ம் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.









