கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் தமிழக அரசு ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 94,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கபட்டுள்ளது.மேலும் இச்சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அப்படி இருக்கும் நிலையில் இன்னும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதை சமத்துவ மக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என பள்ளிகல்விதுறை செயலருக்கும், ஆசிரியர்தேர்வுவாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. எனவே பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நடப்பு காலிப்பணியிடங்களை அவர்களை கொண்டு நிரப்பி பணியாணை வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்குகிறேன், ஒரு மாதத்தில் பணி வழங்குகிறேன் என வெற்றறிக்கைதராமல், வேலையை தந்திட நடவடிக்ககைளை மேற் கொள்ளவேண்டும். நான்காண்டுகளாக போராட்டங்களை நடத்தி வரும் 2013 ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து முதல்வர் தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கு பணியாணை வழங்கிட வேண்டும்.
திரு. சரத்குமார்
தலைவர்
சமத்துவ மக்கள் கட்சி








