காபி தேநீர் அதிகம் குடிப்பதை நிறுத்துங்கள். கோலா போன்ற கார்ப்பனேட்டட்
பானங்களும் பற்களில் கறையை ஏற்படுத்தும். அதிகமாக அமிலத்தன்மை உள்ள
பானங்கள் பற்களில் எனாமலை போகச் செய்யும். கறைகளையும் கொடுத்துவிடும்.

ஆகவே, முடிந்தவரை இவற்றை அதிகம் பற்களில் படாமல் பார்த்துக்கொண்டால்,
பற்களில் கறை ஏற்படாது. சிட்ரஸ் பானங்களை ஸ்ட்ரா வைத்து குடிப்பது
பற்களுக்கு நல்லது.
கேரமல் இனிப்பு வகைகள், சாக்லேட், ஆரஞ்சு, பச்சை மஞ்சள் போன்ற வெளிர்
நிறமுள்ள கேண்டி வகைகள் ஆகியவை வேகமாக பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்.
இதனால் வேகமாக கிருமிகள் மற்றும் மிட்டாய்களின் நிறங்கள் பற்களில் தங்கி,
கறையை உண்டாக்கும். இவை பற்களின் அழகை பாதிப்பது போல அமையும்.
அடர் பிரவுன் உள்ள சாக்லேட்டுகள் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்.
ஆகவே, அவற்றை உண்ணலாம். கார உணவுகள் சாப்பிடுவதால், எச்சில் அதிகமாகச்
சுரக்கப்படும். இவை கிருமிகளைப் பற்களிலிருந்து வெளியேற்றிவிடும்.
இரவில் படுக்கும்போது, ஆரஞ்சு தோலைக்கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு,
வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். அதில் உள்ள வைட்டமின் சி
சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை
வலுவாகவும் வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்
எலுமிச்சைச் சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பற்களைத் தேய்க்கலாம்
அல்லது எலுமிச்சையின் தோலைக்கொண்டு பற்களைத் தேய்த்து, பின் குளிர்ந்த
நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள்
கறைகள் நீங்கும்.
அனைத்தையும்விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள்தான் உப்பு.
இந்த உப்பைக் கொண்டு பற்களைத் தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள்
கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பைப் பயன்படுத்தினால், அவை ஈறுகளையும்,
எனாமலையும் பாதித்துவிடும்.
துளசி இலையை வெயிலில் சில மணிநேரம் உலர வைத்து, பின் அதைப் பொடி செய்து,
தினமும் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களைத் துலக்கிவந்தால், மஞ்சள் கறைகள்
அகலும்.