இந்த எண், ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 முடிக்கும் வரை, மாறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண் அடிப்படையில், மாணவர்களுக்கு மின்னணு, 'சிப்' பொருத்தப்பட்ட, ஸ்மார்ட் அட்டை வழங்க முடிவானது.திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்னும், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவில்லை. இந்த அட்டை வழங்கப்பட்டால், பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் தர மறுத்தாலும், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி, மாணவர்கள், மற்றொரு பள்ளியில் சேர முடியும்.போலி மாணவர்கள் பெயர்களை, பள்ளிகளின் பதிவேட்டில் சேர்க்க முடியாது. அரசின் திட்டங்களை, போலி மாணவர்களின் பெயரில், யாரும் அபகரிக்க முடியாது. அரசுக்கு ஏற்படும் வீண் செலவுகளும் குறையும். இதுபோன்ற பல நன்மைகள் உள்ளன. 'எனவே, இனியும் தாமதம் செய்யாமல், ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்