இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது. 'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்; அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மற்றும், https://tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.








