சென்னையில் 4 நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள்
போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ்
பெறப்பட்டது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு, குடிநீர் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொடக்ககல்வி ஆசிரியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...