பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது எனவும் அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-
10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







