வரும்
கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால்,
தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் இணையதளத்தில் இருந்து, பழைய பாட புத்தகங்கள்
நீக்கப்பட்டுள்ளன.
, தமிழகத்தில்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என,
பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. பள்ளிக்கல்வி அமைச்சராக
செங்கோட்டையன்; செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றதும், அதிரடி மாற்றங்களை
ஏற்படுத்தினர். இதில் முக்கியமாக, ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத்
திட்டத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பணிகள், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப்யாதவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூன்,
1ல் துவங்கும், புதிய கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1
வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, புதிய
பாடத் திட்டத்தின் புத்தகங்கள் நவீன தொழில்நுட்பம், பல வண்ணங்கள்,
பார்கோடுகள், சித்திரங்கள், வீடியோ படங்கள் என, சிறப்பம்சங்களுடன்
தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு
வசதியாக, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின்,
http://www.textbooksonline.tn.nic.in இணையதளத்தில், ஒன்று, ஆறு, ஒன்பது
மற்றும் பிளஸ் 1 வகுப்புகளின், பழைய புத்தகங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
விரைவில், புதிய புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என, தமிழ்நாடு
பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் அறிவித்துள்ளது.







