சட்ட விரோதம் : இதுகுறித்து, சீருடை பணியாளர் தேர்வு குழும அதிகாரிகள் கூறியதாவது:காவல் துறையில், இரண்டாம் நிலை காவலர் மற்றும், எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்யும் போது, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு, 9 சதவீதமும், பணியில் உள்ள, அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, 1 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.ஆனால், 'ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்குவது போல, ஓய்வு பெற்ற, அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும்' எனக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் என, தீர்ப்பு அளித்துள்ளது.அதனால், மார்ச், 11ல் நடத்தப்பட்ட, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகளை, வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தால் தான், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.