நான் இங்கு சொல்லுகின்ற போதை கொஞ்சம் வித்தியாசமான போதை மற்ற போதைகளை கூட அடக்கி விடலாம்.... நான் சொல்லப்போகும் போதையை அடக்கவே முடியாது....
இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முடியும்....
உதாரணமாக பள்ளி செல்லும் பக்கத்து வீட்டு ஏழை குழந்தைக்கு அந்த வருடத்திற்கான படிப்பு தொகையையோ அல்லது புத்தகத்தையோ அல்லது ஒரு வருட சீருடையோ தருவதின் மூலம்.
இதே போலத்தான் நமது பக்கத்தில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு உதவிக்காக ஏங்கி கொண்டிருப்பார்கள் நமக்கு கடவுளின் அருளால் நல்ல சம்பளமும் நல்ல செல்வாக்கும் கிடைத்திருக்கக் கூடும் ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படி உதவி செய்வதே கிடையாது.
மாறாக அவர்கள் சொல்வது எல்லாம் அப்படி மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டேன் இனி கவலையே இல்லை.
நீங்கள் சேர்த்து வைத்த சொத்து உங்கள் அடுத்த தலைமுறையை கண்டிப்பாக காக்க போவது இல்லை மாறாக நீங்கள் செய்யும் தான தர்மங்கள் உங்கள் 3 சந்ததியை மட்டுமல்ல அடுத்து வரப்போகும் எண்ணிலடங்கா சந்ததிகளை கண்டிப்பாக காப்பாற்றும்.
ஒரே ஒரு நாள் உங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனை சென்று பாருங்கள் அங்கே ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் கர்ப்பிணி தாய்மார்கள் உங்கள் தந்தை போலவும் தாய் போலவும் அங்கே கஷ்டப்படுபவர்கள் ஏராளம் ஏராளம்...
நீங்கள் போகும் ரோட்டோரங்களில் பாருங்கள் வீடுகள் இல்லாத ஏழைகள் பலர் கஷ்டப்படுகின்றனர்....
நீங்கள் வசிக்கும் தெருக்களில் பாருங்கள் ஏதோ ஓரிரு குடும்பம் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு சரியான ஊட்டச்சத்து இல்லாத ஏழை குழந்தைகள் கண்டிப்பாக இருப்பார்கள் அவர்கள் வீட்டில் இல்லாமல் கல்யாணம் முடியாமல் முதிர் கன்னிகள் கண்டிப்பாக இருப்பார்கள்...
நான் மேலே சொன்னது கொஞ்சம் நஞ்சம் மட்டுமே...
அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன...
இப்போது சொல்லுகிறேன் அந்த போதையை...
கணக்குப் போடுங்கள் உங்கள் எல்லாவித தேவைகளுக்கும் அப்பாற்பட்டு உங்களது சேமிப்பில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதில் ஒரு 5 சதவீதம் எடுத்து நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்க்கும் கஷ்டப்படும் நபர்களுக்கு ஊடுருவி சென்று உதவி செய்யுங்கள்... ஒரே ஒரு தடவை உதவி செய்துவிட்டு அதனை உங்கள் புகழுக்காக விளம்பர படுத்தாதீர்கள்.
கொஞ்ச நாள் போகட்டும் உங்களால் உதவி பெற்றவர் உங்கள் கண்முன்னே நீங்கள் ஏற்கனவே பார்த்த கஷ்டப்படாமல் நிம்மதியாக வாழும் போது அவர் உங்களை ஒரு பார்வை பார்ப்பார் அதுதான் கடவுளின் பார்வை அதுதான் உண்மையான போதை.
பிறகு என்ன அந்த போதைக்கு அடிமையானவர்கள் யார் சொன்னாலும் கேட்காமல் யார் உங்களை கட்டுப்படுத்தினாலும் கட்டுப்படுத்தினாலும் அதற்கு மேல் அந்த போதையில் இருந்து உங்களை கட்டுப்படுத்த முடியாது.







