Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்
முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்
110விதியின் கீழ் பணிநிரந்தர அறிவிப்பினை முதல்வர் வெளியிட தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை!!!
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் முதல்வருக்கு 3.6.2018 அன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கடந்த ஜீன், ஜீலை 2017ல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்த திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்றும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் பதிலளித்திருந்தார்.
ஆனால் ஜனவரி 2018ல் நடைபெற்ற கூட்டத்தொடரில் வேடச்சந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது தரப்பட்டுவரும் தொகுப்பூதியமான ரூ.7700/- ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தியதைகூட கல்வி அமைச்சர் கருத்தில் எடுத்தகொள்ளவில்லை.
அதைப்போலவே இந்த நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் கம்பம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது தரப்பட்டுவரும் தொகுப்பூதியமான ரூ.7700/- ஊதியத்தை ரூ.15000மாக உயர்த்தி தர வலியுறுத்தியதைகூட அமைச்சர் மறுத்தது கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களுக்கு பதிலளித்ததற்கு நேர்எதிராக பேசியுள்ளது, அனைத்துவேலை நாட்களிலும் முழுநேரப்பணியுடன் பணிநிரந்தரத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் வெவ்வேறு விதமாக கல்விஅமைச்சர் பதிலளித்து வருவது குறித்து அனைவரும் வேதனைக்குள்ளாகிவிட்டனர்.
முழுநேரவேலை கேட்டுவரும் பகுதிநேர ஆசிரியர்களின் தொடர்கோரிக்கைகளை ஏற்காத தமிழகஅரசு, மாறாக பள்ளிகளை இழுத்துமூடி பூட்டுபோடும் ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் போராட்ட நாட்களில் மட்டும் அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தி 100% அளவில் பள்ளிகளை இயக்கிடும் அரசின் இரட்டைநிலையை கைவிட்டு 8 வருடப்பணிக்கு அங்கீகாரம் அளித்து அனைத்துவேலைநாட்களிலும் முழுநேரப்பணிடன்கூடிய காலமுறை ஊதியத்தில் சிறப்பாசிரியர்களாக பணியமர்த்திட வேண்டும்.
மே மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதலாக வேலை, இறந்துபோன பகுதிநேரஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணநிதி, 58 வயதைஎட்டி பணிஓய்வில் சென்ற பகுதிநேர ஆசிரியர்களுக்குக்கும் முதலமைச்சர் நிவாரணநிதி, பெண் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய மகப்பேறுகால விடுப்பு, அனைவருக்கும் அவரவர் இருப்பிட பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல், மாதத்தில் 1ந்தேதி சம்பளம் போன்ற கோரிக்கைகளை கேட்டு வலியுறுத்தி கேட்டுவந்தும் இதுவரை அரசு பரிசீலித்து வருவதாக தெரியவில்லை. மேலும் பொதுவாக ஒப்பந்த தொகுப்பூதிய பணிசெய்பவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுவரும் பி.எஃப், இ.எஸ்.ஐ, இ.பி.எஃப், இன்கிரிமென்ட்(ஆண்டுவாரியான ஊதிய உயர்வு), பண்டிகை போனஸ் போன்றவற்றையும் அரசு அமுல்செய்யவில்லை. 7வது ஊதியக்குழு அரசாணைப்படி 30% ஊதியஉயர்வையும் இதுவரை வழங்கவில்லை. அதைப்போலவே மத்தியஅரசின் குறைந்தபட்ச ஊதியத்தையும் நிர்ணயம் செய்து இதுவரை நடைமுறை செய்யவில்லை.
மேற்கண்ட இவை அனைத்தும் அரசு வழங்காததால் வாழ்வாதாரம் சுரண்டப்படுகிறது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் தற்போது பணிபுரியும் 12637 தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கிவரும் குறைந்த தொகுப்பூதியமான ரூ.7700ஐ உயர்த்தி, வாரம் 3 அரைநாள்கள் மட்டும் பணி என்பதை மாற்றி இனி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேரப் பள்ளிப் பணியை வழங்கி, தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது 110விதியின்கீழ் புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என அக்கடிதத்தில் தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் நமது செய்தியாளர்களிடம் திரு.செந்தில்குமார் கூறியதாவது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்வி ஆண்டுகளில் 10 மாதங்களுக்கு மட்டுமே தொகுப்பூதியமாக ரூ.10000 வழங்கப்பட்டு வந்தது. இவர்களின் தொடர் போராட்டங்களை ஏற்று 14வது சட்டமன்றத்தில் ரூ5000 உயர்த்தி ரூ15000ஆக தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15வது சட்டமன்றத்தில் தற்போது நடந்த கல்விமானியக் கோரிக்கையின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரைமுறை செய்யப்படும் என்று அறிவித்தார். எனவே கடந்த 8 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிசெய்துவரும் 12637 பகுதிநேர ஆசிரியர்களையும் பணிவரைமுறை செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அறிவித்து இருக்கவேண்டும் என்பதே அனைவரின் தொடர் கோரிக்கை ஆகும் என்றார்.
இவன், செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,செல் : 9487257203
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








