பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.08.18 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.08.18


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.08.18

திருக்குறள்


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.

விளக்கம்:

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

பழமொழி

Manners make the man.

ஒழுக்கம் உயர்வு தரும்.

இரண்டொழுக்க பண்பாடு

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை...

 பொன்மொழி

முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால் , எஜமாமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

         - விவேகானந்தர்





பொது அறிவு

1.முதன் முதலில் பாரதரத்னா விருது பெற்றவர் யார்?

திரு .ராஜகோபாலச்சாரி

 2. பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி யார்?

 திருமதி. இந்திராகாந்தி

English words and. Meanings

Nomination. நியமனம்
Narrative.     கதை
Negative.     எதிர்மறை
Narrow         குறுகலான
Necessary   அவசியமான





நீதிக்கதை




வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. ""இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா?ன்னு கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். ""இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.

அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான். ""உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்.
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானான். அவர்தான் செஸ்டர் கீரின் வுட். சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.

இன்றைய செய்திகள்

23.08.2018

* புகையிலை பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக முதலில் 100 மாவட்டங்களில் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.

*  சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நில உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி. கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆட்ட ஊதியத்தை இந்திய அணியினர் வழங்கியுள்ளார்கள்.

* இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 25 மீ. பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரஹி சர்னோபத் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4-வது தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

Today's Headlines

🌸kerala:Chief Minister Mr. Pinarayi Vijayan thanks Abu Dhabi Crown Prince; Centre releases Rs. 600 crore🌹
🌸Udupi:Deputy Commissioner Priyanka Mary Francis said on Tuesday that a Rapid Response Team to provide medical aid has been formed to cater to the health needs of people during heavy rainfall and natural disasters in Udupi district. 🌹
🌸Chennai:The third edition of the Kotak Wheelchair Marathon is all set to be held on September 2. This year, as the organisers claim, the event will be bigger and better.🌹
🌸Karur:Transport Minister M.R.Vijayabhaskar on Tuesday said efforts were being made to provide infrastructure for the new Government Medical College coming up at Gandhigramam in Karur by September next.🌹
🌸Tiruchirappalli:Persons with disabilities, who require artificial limbs, can apply under the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme, Collector K. Rajamani has said.🌹
🌸18 th Asian games
Abhishek Verma bags bronze; Sanjeev Rajput pockets silver in 50m rifle 3 positions
Saurabh Chaudhary, all of 16, on Tuesday became only the fifth Indian shooter to claim a gold in the Asian Games history, beating a field of multiple World and Olympic champions in the 10m air pistol finals here.🎖💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H