'நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழக
வளாகங்களுக்குள் ஜங்க் (junk) உணவுகளைத் தடைசெய்யவேண்டும்' என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி-யிலிருந்து நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பல்கலைக்கழகங்களில் ஜங்க் உணவுகளைத் தடைசெய்ய
வேண்டும். இளம் மாணவர்களின் உடல் பருமனைக் குறைக்கும் வகையில் ஆரோக்கியமான
உணவுகள் வழங்க வேண்டும். அதற்கான புதிய தரத்தைப் பின்பற்ற வேண்டும்' என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட
அறிவிப்பை தற்போது நினைவுபடுத்தும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.







