பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.18 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.18 :

திருக்குறள்
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
விளக்கம்:
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

பழமொழி
Don't add fuel to the fire

 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதே

இரண்டொழுக்க பண்பாடு

1.  நான் எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி நடப்பேன்.

2.  நான் என்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.

 பொன்மொழி

அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான்.

      - மகாத்மா காந்தி
 
பொது அறிவு

1.  இந்தியாவின் மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் யார் ?
 
   திரு. பிரகாஷ்  ஜவடேகர்

2. இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் யார் ?

  திருமதி.சுஷ்மா சுவராஜ்

English words and. Meanings

Coast.    கடற்கரை
Castle.    கோட்டை
Crest.       முகடு
Create.     உருவாக்கு
Cylinder.  உருளை

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*சிறியாநங்கை*

1.  சர்க்கரை வியாதியை குணப்படுத்துகிறது.


2. இந்த இலையானது மிகவும் கசப்பு தன்மையுடையது.

நீதிக்கதை

வித்தைக்காரன் தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.

இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.

இன்றைய செய்திகள்

12.09.18

* சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் கருகி வரும் சம்பா நெற்பயிரை காப்பாற்ற வெண்ணாற்றில் இருந்து தண்ணீரை திறந்துவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

* உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.24-ம் தேதி தமிழக அரசு பதில் தர வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.

* கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்துப் போட்டியின் இரண்டாவது லீக் சுற்று ஆட்டத்தில் ராணுவம், ரயில்வே, கேரள சுங்க வரித் துறை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

Today's Headlines

🌸Chennai High court warns the government that the Chennai--salem eight stream  scheme will be banned if trees are cut for salvage of the project🌹

🌸The publics of Thiruvarur district attempt road picket  to open the water from vennaru to save  the Samba paddy 🌹

🌸 The Supreme Court has ordered the Tamil Nadu Government to reply on September 24, regarding the local body election🌹

🌸Indian cricketer K.L .Rahul made a century in the 5th Test against England🌹

🌸 The Army, Railways and Kerala Customs Division teams have won in the second league round of the All-India Men's Basketball Tournament for the P.S.G trophy held in Coimbatore.

Prepared by
Covai Women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H