விநாயகர் சதுர்த்திக்காக விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விநாயகர் சதுர்த்திக்காக விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது விநாயகருக்காக மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று. மிகவும் விசேஷமானதும் கூட. விக்ன விநாயகரைப் போற்றி, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வருகின்ற சதுர்த்தி தினம் தான் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால், அனைத்து நன்மைகளையும் பெறுவதோடு மனதுக்குள் நினைக்கும் அத்தனை வேண்டுதல்களும் நிறைவேறும்.


 விரதமும் வரலாறும்


தேவேந்திரனாகிய இந்திரனின் வாகனமான அன்னப் பறவை விமானம் திடீரென பறக்க மறுத்துவிட்டது. அதை மீண்டும் பறக்கச் செய்வதற்காக தேவேந்திரன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இருந்தார். அதன் பயனாகவே மீண்டும் அவருடைய விமானம் வானில் பறந்தது. அதேபோல, கர்த்தம ராஜா, நளன், சநிதிராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் ஆகியோர் இந்த விரதத்தைத் தான் மேற்கொண்டு பல்வேறு பலன்களை அனுபிவித்தனர்.


 விரதம் இருக்கும் முறை


காலை விடியல்
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். உள்ளத்தையும் உடலையும் நன்கு தூய்மை செய்து கொண்டு, மனம் உருக விநாயகரை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.


 பூஜை தொடக்கம்


அதிகாலை எழுந்ததால் காபி எதுவும் குடித்துவிடாமல் இருங்கள். சூரியன் உதிக்கும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. குளித்துவிட்டு, விநாயகரை மனதுக்குள் நினைத்திருந்து, என்னுடைய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கள் தீர்க்க வேண்டும் என்று வேண்டி பூஜையைத் தொடங்க வேண்டும்.

முதலில் விநாயகரைப் போற்றி வழிபட வேண்டும். பின்னர்,அவரிடம் நான் இன்று இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளப் போகிறேன். அதற்கு எவ்வித தடைகளும் வந்துவிடாமல் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.


 நைவேத்தியம்


இந்த விரதத்தின் போது செய்யும் பூஜை படையலில் நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயார் செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.


 தானம் செய்தல்


உங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தானம் செய்யலாம். ஆனால் வேண்டுமென்றே பணம் இருப்பவர்கள் கஞ்சத் தனம் செய்யாதீர்கள். காலணிகள், குடை, பசு மாடு ஆகியவற்றை தானமாகக் கொடுத்தால் சிறப்பு. ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். நிறைய மேன்மைகள் உங்களுக்கு உண்டாகும்.


 நன்மைகள்


இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றவர்களுக்கு விநாயகப் பெருமான் நிச்சயம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தருவார்.


சிறந்த கல்வி ஞானம், அறிவு, தெளிந்த ஞானம், செல்வம், மக்கட்பேறு ஆகியவற்றையும் மன நிம்மதி மற்றும் இன்பத்தையும் உங்களுக்கு வாரி வழங்குவார். இந்த விரதத்தை சிலர் ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கிற ஆலயத்திலும் மேற்கொள்வார்கள். வீட்டிலும் இருக்கலாம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H