நாகை, கோட்டை வாசல்படியைச் சேர்ந்த, ஒன்பது மாணவ - மாணவியர், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள், கேரளா மாநிலத்தில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாகையில் பல்வேறு தரப்பினரிடம் நிதி திரட்டினர்.
தாங்கள் திரட்டிய நிதி, 25 ஆயிரத்து, 618 ரூபாயை, 'டிடி' எடுத்து, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் சுரேஷ்குமாரிடம் வழங்கினர். மாணவர்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.








