ஜியோவின்
ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை
பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.
யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும்
வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும்
போது நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நான்கு மாதங்கள் இலவச சேவையை பெற முடியும்.
ஆண்டு
சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை
பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு அல்லது அரையாண்டு வரை
திட்டங்களை ரீசார்ஜ் செய்வோருக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
சலுகை செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
மேலும்
இலவச சேவையை பெற வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் யு பிராட்பேன்ட்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
ஏற்கனவே
ஒரு மாத திட்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் மூன்று மாதங்களுக்கு கட்டணம்
செலுத்தும் போது ஒரு மாதம் இலவசமாகவும், ஆறு மாதங்களுக்கான திட்டத்திற்கு
இரண்டு மாதங்கள் மற்றும் பன்னிரெண்டு மாதங்களுக்கு நான்கு மாதங்கள் இலவச
சேவை வழங்கப்படும் என யு பிராட்பேன்ட் அறிவித்துள்ளது.
தற்சமயம்
காலாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளரால் ஆறு மாதங்கள் அல்லது
பன்னிரெண்டு மாதங்களுக்கான திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
இதேபோன்று அரையாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டு
மாத திட்டத்திற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...