TNPSC: நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு!; முழு பாதுகாப்பு அம்சத்துடன் கணினி வழி தேர்வு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC: நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு!; முழு பாதுகாப்பு அம்சத்துடன் கணினி வழி தேர்வு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு :

நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்! குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள்நேற்று (ஜூலை 30) வெளியிடப்பட்டது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர்இன்று(ஜூலை 31) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய முறைகளின்படி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர் என தெரிவித்தனர்.
நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். ஒருங்கிணைந்த தேர்வால் அரசுக்கு 12 கோடி ரூபாய் செலவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்வு செய்யப் பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும். மேலும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் தேர்வர்கள் பங்கேற்றால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. அதனால், தேர்வர்கள் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரத்துக்குள் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் தேர்வு நடத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

முழு பாதுகாப்பு அம்சத்துடன் கணினி வழி தேர்வு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., யின் கணினி வழி தேர்வு, அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1' தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தேர்வில் முறைகேடுகளை தடுக்கவும், தேர்வை விரைந்து முடிக்கவும், கணினி வழி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி.,யின் கணினி வழி தேர்வு என்பது, 'ஆன்லை' முறையில் நடக்காது. விண்ணப்பங்கள் மட்டுமே ஆன்லைனில் பெறப்படும்.

மாவட்ட வாரியாக, டி.என்.பி.எஸ்.சி., அமைக்கும், கணினி தேர்வு மையங்களில், அதிகாரிகள் முழு கட்டுப்பாட்டில், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுடன், கணினி வழியில் தேர்வு நடக்கும்.

இதனால், எந்த முறைகேடுகளுக்கும் வாய்ப்பில்லை. முதற்கட்டமாக, அதிகபட்சம், 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் தொழில்நுட்ப தேர்வை மட்டும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான, வினாத்தாள்கள், தேர்வு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன், அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்படும். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு அறைக்குள், வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

தேர்வர்கள் எந்த கணினியை பயன்படுத்துகின்றனர்; தேர்வின் போது, விடைகளை தேர்வு செய்ய, தேர்வர்கள் தங்கள் கணினியின் மவுசை இயக்கும் விதம் உட்பட அனைத்தும், கணினியில் பதிவு செய்யப்படும்
தேர்வின்போது, தேர்வர்களின் கணினி செயல்பாடுகளை அவர்களின் விருப்பத்தின்படி, தகவலாகவும் வழங்க முடியும்.வினாத்தாள் அமைப்பு, விடை திருத்தம், தரவரிசை பட்டியல் தயாரிப்பு போன்றவை, டி.என்.பி.எஸ்.சி.,யால் முழு பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள், தனியாரிடம் ஒப்படைக்கப்படாது

சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தும், யு.பி.எஸ்.சி., அமைப்பும், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை ஏற்கனவே, ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி வருகின்றன
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2012 முதல், 2015 வரை, 27 தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H