வரலாற்றில் இன்று 04.10.2018 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வரலாற்றில் இன்று 04.10.2018

அக்டோபர் 4 (October 4) கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
610 – ஹெராகிளியஸ் ஆபிரிக்காவில் இருந்து கொன்ஸ்டண்டீனப்போலை கப்பல் மூலம் அடைந்து பைசண்டைன் பேரரசன் போக்காஸ் மன்னனை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.
1209 – நான்காம் ஒட்டோ புனித ரோமப் பேரரசனானான்.

1537 – மத்தியூ பைபிள் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1777 – அமெரிக்கப் புரட்சி: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகளை சேர் வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.
1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது.
1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
1853 – கிரிமியப் போர்: ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது.
1883 – ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் கடுகதி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1910 – போர்த்துக்கல் குடியரசு அறிவிக்கப்பட்டது. இரண்டாம் மனுவேல் மன்னன் ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பினான்.
1918 – நியூ ஜேர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.
1957 – பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டிக்கு நடைப்பயணம் நடத்தப்பட்டது.
1957 – முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1958 – பிரான்சின் ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1959 – லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
1963 – கியூபாவை சூறாவளி தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1965 – ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்ற முதலாவது பாப்பாண்டவர் பாப்பரசர் ஆறாம் போல் நியூயோர்க் வந்ட்தடைந்தார்.
1966 – பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1992 – மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உளநாட்டுப் போரை முடிவுக்கு வந்தது.
1992 – ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.
2001 – சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1884 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
1904 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)
1936 – கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், கட்டடக் கலைஞர்
1988 – டெரிக் ரோஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1669 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)
1947 – மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (பி. 1858)
2000 – மைக்கல் ஸ்மித், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1932)
சிறப்பு நாள்
லெசோத்தோ – விடுதலை நாள் (1966)
அசிசியின் புனித பிரான்சிசின் திருவிழா (கத்தோலிக்கம்)
உலக வன விலங்குகள் நாள்
உலக விண்வெளி வாரம் ஆரம்பம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H