காற்று, உணவு, ஆற்றல், நிலம்,கழிவுகள், நீர் ஆகிய ஆறு பெருந்தலைப்புகளில் வேடியப்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவ்வாய்வானது நடைபெற்றது.
ஆய்வின் ஒரு நிகழ்வாக மாணவர்கள் புவியின் உயிர்ச்சூழல் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியினை தலைமை ஆசிரியர் திருமதி.ச.சசிகலைகுமாரி தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் திரு.ச.அருள்செல்வம் திறந்து வைத்து பள்ளியின் தேசியப்பசுமைப்படை மாணவர்களிடம் சுற்றுச்சூழல் அவசியம் குறித்து கலந்துரையாடினார். கண்காட்சியில் பள்ளித்துணை ஆய்வாளர் திரு.ஜி.குமார் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
கண்காட்சிப் பணியினை அறிவியல் ஆசிரியர் திரு.அ.நாராயணன் மேற்கொண்டார். தேசியப்பசுமைப்படை ஆசிரியர் திருமதி.க.முத்துலட்சுமி நன்றியுரையாற்றினார்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது.








