சிவகங்கை மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தாங்களே
களத்தில் இறங்கி, கிராமங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தென்
மேற்கு பருவமழை முடிந்து, வட கிழக்கு பருவமழை துவங்கிய இடைப்பட்ட
காலத்தில், மாநிலம் முழுவதும், ஆங்காங்கே டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல்
பரவியது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, காய்ச்சல்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர
முருகன் உத்தரவிட்டார். காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள்,
பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஒவ்வொரு தெருவாக சென்று, வீடுகள் மற்றும் தெருக்களில், கொசு உற்பத்திக்கு சாதகமாக உள்ள, பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்ற, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில், மாணவர்களே களத்தில் இறங்கி, தேவையற்ற பொருட்களை அகற்றினர். மாணவர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...