கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாம். இதுகுறித்து ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விசித்திரமான அதிவேக விமானங்கள் பறப்பது மற்றும் விண்ணில் சில பொருட்கள் நகர்வதை இத்திட்டத்தின் ஆவணங்கள் விவரிப்பதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள், இது மாதிரியான விவரிக்க முடியாத சில சம்பவங்கள், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என கூறுகின்றனர்.
முன்னதாக இந்த ஆண்டில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, லட்சக்கணக்கான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டது. விண்ணில், அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் பறக்கும் வட்டத்தட்டுகளை கண்டது குறித்த ஆவணங்களும் இதில் அடங்கும்.
விரைவு ரேடியோ வெடிப்புகள் (Fast radio bursts) முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞையை பதிவு செய்தது.ராயல் வானியல் கழகத்தின் மாதாந்திர அறிக்கையில் 4 புதிய சமிக்ஞைகள் ஆராய்ச்சிக்காக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன என கூறபட்டு உள்ளது.
இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நிகல் வாட்சன் கூறும் போது
விண்வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு அபூர்வமான சமிக்ஞைகளும் எங்களுக்கு ஒரு வேற்று கிரக நாகரீகம் இருக்கும் என ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த சமிக்ஞைகளை கேட்கும் போது இந்த பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனியா இல்லை என எண்ண தோன்றுகிறது.








