‘இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல்
உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீரான
இடைவெளியில் ரத்த தானம் செய்து வந்தால் புற்றுநோய் பாதிப்பில் இருந்தும்
விடுபடலாம், ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்பது ஆய்வில் உறுதி
செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம், ஆயுளையும் அதிகரிக்க செய்யும். தொடர்ந்து
ரத்த தானம் செய்வதன் மூலம் உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு
வாழ்நாளை நீட்டிக்க செய்யும். நோய் எதிர்ப்பு மண்டல அமைப்பையும்
வலுப்படுத்தும்.
இரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உற்பத்தியாகும்.
அப்படி ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் உடல்
புத்துணர்ச்சி பெறும். உடலில்இருந்து கார்பன் டை ஆக்ஸைடை நீக்கவும் உதவும்.
ஒருமுறை ரத்த தானம் செய்யும்போது உடலில் இருந்து 650 கலோரி செலவாகும்.
அதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.







