இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு:
கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
நுழைவுச் சீட்டு கிடைக்காதோர்
இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது








