உழைப்போம் நேர்மையாக , பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ! கடமையைத் துணிவோடு செய்வோம் பாரபட்சம் இல்லாமல் ! நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும் ! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உழைப்போம் நேர்மையாக , பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ! கடமையைத் துணிவோடு செய்வோம் பாரபட்சம் இல்லாமல் ! நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும் !

அந்தக் காலத்தில்   TVS  பஸ் நிறுவனம்  தான்  தமிழகமெங்கும்    பஸ்  போக்குவரத்தை   நடத்தி  வந்தார்கள்  என்று   கேள்விப்பட்டதோடு    TVS   பஸ்  முதலாளியைப்  பற்றி   கடந்த   வாரம்   எனது  மரியாதைக்குரியவர்   மூலம்   மிகவும்    அற்புதமான   விஷயம்  ஒன்றைக்  கேட்டேன்  !
அந்த  நிறுவனம்   இத்தனை  நூற்றாண்டுகளாகப்   புகழ்  வாய்ந்து    பெரிய  அளவில்   உயர்ந்து  நிற்க  அது  தான்  காரணம்  !

ஒரு  முறை   TVS   பஸ்   முதலாளியின்   மகன்    அந்த  பஸ்ஸில்   பயணம்   செய்தபோது    அவரிடம்    டிக்கெட்   எடுக்க   அந்த   பஸ்ஸின்   கண்டக்டர்    வந்த  போது    TVS  முதலாளியின்  மகன்   மிகவும்   கோபப்பட்டாராம்  !

நான்   இந்த  பஸ்   முதலாளியின்   மகன்   என்பது   உனக்குத்  தெரியுமா  ?  என்று  கேட்டவரிடம்   அந்தச்  சாதாரண    கண்டக்டர்    சொன்னாராம்   மிகவும்   அமைதியாக  "   தெரியும்   அய்யா  !   ஆனால்    பஸ்ஸில்   பயணம்  செய்யும்   அனைவரிடமும்   டிக்கெட்   வாங்க  வேண்டும்   என்பது   எனக்கு   வழங்கப்பட்ட   சட்டம்  !

டிக்கெட்  வாங்காவிட்டால்    தங்களை   இங்கேயே  இறக்கி  விட  வேண்டியிருக்கும்  "  ,      என்ற  கண்டக்டரிடம்    கோபமாக  டிக்கெட்   வாங்கி  விட்டு    பயணம்  செய்தாராம்   அந்த  பஸ்  கம்பெனியின்   முதலாளி  மகன் !

நடந்த   விஷயங்களைக்  கேள்விப்பட்ட    TVS  முதலாளி   மிகுந்த   கோபத்தோடு   அந்த  கண்டக்டரை   நாளை   அலுவலகத்தில்   வந்து  என்னைப்  பார்க்கச்  சொல்லுங்கள்   என்று   உத்தரவிட்டிருக்கிறார் !

அன்று  இரவு    மிகவும்   கவலையோடு   வீட்டுக்கு   வந்த  அந்தக்  கண்டக்டர்   தனது   ஏழைத்  தாயின்  மடியில்  தலை  சாய்த்துக்  கொண்டு   "  நாளை  முதல்  எனக்கு   இந்த   வேலையும்  போய்விடும்  !  என்ற  மகனிடம்   அந்த  ஏழைத்  தாய்  சொன்னார்கள்  "  மகனே   எந்த  நிலை  வந்தாலும்   கடமையை  நேர்மையாகச்  செய்  ,    என்று  !

மறுநாள்   மிகுந்த  பயத்தோடு    முதலாளியின்   அறைக்கு  சென்றவரை   மிகவும்   அன்பாகத்   தன்னோடு  அணைத்துக்  கொண்ட  TVS  முதலாளி  "   இன்றிலிருந்து   என்  பஸ்  கம்பெனியின்   Checking Inspector  ஆக  (  செக்கிங்  இன்ஸ்பெக்டர்  )  உன்னை  நியமிக்கிறேன்  !  முதலாளியின்   மகன்  என்று  கூட  பயப்படாமல்    உனது  கடமையைச்  சரியாகச்  செய்த  உன்னைப்  போன்றவர்கள்  தான்   இங்கே  அதிகாரியாக  இருக்க வேண்டும்  "   என்ற  போது   தனது  தாயின்   வார்த்தைகள்  எத்தனைப்பெரியது என்று  மகிழ்ந்த   அவர்  பின்னாளில்   பல   பஸ்  கம்பெனிகளுக்கு   முதலாளியானார்  !

           " ஆளைப்  பார்த்து   வேலை  செய்வதும்  ,   அதிகாரங்களைக்  கண்டு   நேர்மையைக்   கைவிடுவதும்  ,  அல்லது  கண்டு  கொள்ளாமல்    நமக்கென்ன    நம்ம   குடும்பம்   வாழ்ந்தால்   போதும்   என்று   அவர்களுக்குக்  கும்பிடு   போட்டு       வேலை  செய்கிறவர்கள்    சுயநலவாதிகள்  !

நேர்மையாகத்  தங்களது   பணியைச்  செய்பவர்களை   பணிசெய்ய  விடாமல்   தங்களது   அதிகாரத்தை   பயன்படுத்தி   ஆணவம்   கொள்பவர்கள்    உயிரோடு   நடமாடும்   பிணங்கள்  !

கோடிகோடியாக    பணம்  இருந்தாலும்    வனளாவிய  அதிகாரங்கள்   இருந்தாலும்    உள்ளுக்குள்   நிம்மதியை   இழந்து   வாழும்   பரிதாபத்துக்குரியவர்கள்  !

 தங்கள்   கடமையை  நேர்மையாகச்   செய்பவர்கள்   கெட்டுப்  போனதாக  வரலாறுகள்   இல்லை  !

உழைப்போம்  நேர்மையாக  ,    பிறர்  பொருளுக்கு   ஆசைப்படாமல்  !
கடமையைத்  துணிவோடு   செய்வோம்    பாரபட்சம்   இல்லாமல்  !
நிச்சயமாக     மன நிறைவான   வாழ்க்கை   அமைந்தே  தீரும்  !

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H