புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் தேர்வை பொறுத்தவரை பயிற்சிகளுக்காக கால அவகாசம் தரப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் நீட் பயிற்சிகளில் மாணவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். நீட் தேர்வுகளில் பங்கு பெற டெல்டா மாணவர்களுக்கு எந்த ஒரு தங்கு தடையும் இல்லை. பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்காக வழங்க இருந்த 14 வகையான இலவச திட்டங்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்சுத்தம் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும் வகையிலும், மாணவர்களின் குணநலன்களை மேம்படுத்தும் வகையில் நீதிபோதனை வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் செங்கோட்டையன் - விஜயேந்திரர் சந்திப்பு நடைபெற்றது









