
புதிய சலுகையை பெற
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.95 சலுகையை தேர்வு செய்ய வேண்டும்,
எனினும் அமேசான் பே வவுச்சர் பெறும் போது, ரீசார்ஜ் கட்டணம் ரூ.65 விலையில்
கிடைக்கும்.
புத்தாண்டு சலுகையின் கீழ் வோடபோன்
ஐடியா ரூ.95 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 அமேசான் பே
வவுச்சர் வழங்குவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர் கொண்டு வாடிக்கையாளர்கள் மொபைல்
பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தலாம் என
கூறப்படுகிறது.

வோடபோன்
மற்றும் ஐடியா பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் அனைத்து
வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். அந்த வகையில்
வாடிக்கையாளர்கள் ரூ.95 விலை சலுகையை தேர்வு செய்து அதற்கான பலன்களை
பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 10 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக
கூறப்படுகிறது.
வோடபோன் மற்றும் ஐடியா
நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் புதிய புத்தாண்டு சலுகை பற்றி
இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக
வோடபோன் மற்றும் அமேசான் இணைந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான்
பிரைம் சேவைக்கான சந்தாவில் 50 சதவிகித தள்ளுபடியை வழங்கின. தற்சமயம்
வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளை பயன்படுத்துவோருக்கு அமேசான் பிரைம்
சந்தா வழங்கப்படுகிறது.