தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வுஎழுதவுள்ள
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும்
மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொதுத்
தேர்வு நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 1-இல் பொதுத் தேர்வுகள் தொடங்க
உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2
பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடைபெற்று
வருகிறது.அரசுப்பள்ளிகளில், 25 சதவீத பாடங்கள் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜன.2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையடுத்து, பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, தினமும் மாதிரித் தேர்வுகள்
நடத்தி, சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், சில பகுதிகளுக்கு தேர்வு வைத்து
அவற்றை உடனே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்கள்
கூடுதல் நேரம் படித்து, சிறப்பு பயிற்சி பெற முடியும்.இந்தத் திட்டங்களை,
தலைமை ஆசிரியர்கள் தாமாகவேமுன்வந்து அமல்படுத்த வேண்டும்.
மேலும், வார விடுமுறை நாள்களிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் கூடுதல்
வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய ஆலோசனை தரப்பட்டுள்ளது. பொதுத்
தேர்வில் தேர்ச்சி என்ற இலக்கை தாண்டி, அதிக மதிப்பெண் பெறவும் மாணவர்களை
தயார் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







