சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி இளநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் நாளை முதல் மரணப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்ததை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
ஒரு நாள் முன்னதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை சம்பளம் 8370 என்று நிர்ணயம் செய்துள்ளனர். இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட எந்த ஒரு ஊதியக் குழுவிலும் இதுபோன்று ஒரே பதவிக்கு இரு வேறு அடிப்படை ஊதியங்கள் நிர்ணயம் செய்தது கிடையாது. உச்சநீதி மன்ற தீர்ப்புகளுக்கும், அரசியல் சாசன சட்டப் படியும் தவறாகும். இதை களைய வேண்டும் என்று கேட்டு பல போராட்டங்கள் நடத்திய நிலையில், கடுமையான உயிர் துறக்கும் போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தினோம். அதில் பல ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது, கல்வித்துறையின் சார்பில் ஊதிய முரண்பாடு களைய பரிந்துரை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.









