Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அறிவியல்-அறிவோம்: நோய்கள் போக்கும் "தேங்காய் பூ".
(S.Harinarayanan)
கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல
சகுனமாக நாம் கருதுவுதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ
என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். முதிர்ந்த
தேங்காய் முளைக்க தொடங்கும்போது உருவாவதுதான் தேங்காய் பூ அல்லது தேங்காய்
பொறையாகும்.
அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து
சாப்பிடத் தோன்றும்.ஒரு தேங்காய் பூ, மூன்று இளநீருக்கு சமம்.
வைட்டமின்கள்,தாது உப்புகள்,நோய் எதிர்ப்பு திறனளிக்கும் ஊட்டப்பொருட்கள்,
உடலுக்கு வலுவூட்டும் சத்துக்கள் நிறைந்தது தேங்காய் பூ.
நோய் எதிர்ப்பு சக்தி:
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி
இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான
பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
எனர்ஜியை தரும்:
மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை
சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்
அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது.
ஜீரண சக்திக்கு:
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ்.
இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
மலச்சிக்க்லை குணமாக்குகிறது.
சர்க்கரை வியாதிக்கு:
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில்
அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.சர்க்கரை நோயை வராமல்
காக்கும்.
இதயம்:
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட
கொழுப்பை கரைக்கிறது.இதய அடைப்பை தடுக்கும். இதய நோய்களிலிருந்து உங்களை
பாதுகாக்கும்.
தைராய்டு:
நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை
சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு
பாதிப்பை குணப்படுத்துகிறது.
புற்று நோய்:
ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.
உடல் எடை:
உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.
சிறு நீரகம்:
சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும்.
நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறு நீரகத்தை பெறலாம்.
முதுமை:
தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்
நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை
நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









