இதுவரை 4 விஞ்ஞானிகள் இரண்டு முறை நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள், .
2 முறை நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் போலந்து நாட்டைச் சேர்ந்த,
பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி. 1903-ம் ஆண்டு
இயற்பியலுக்கு ஹென்றி பெக்யூரல், பியரி க்யூரியோடு சேர்ந்து இந்தப் பரிசைப்
பெற்றார் மேரி. 1911-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அதிக நோபல் பரிசுகளைப் பெற்ற குடும்பமும் இவருடையதுதான். இவரது மகள் ஐரின்
க்யூரியும் அவரது கணவரும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க
விஞ்ஞானி ஜான் பார்டீன் 1956, 1972-ம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல்
பரிசை வென்றிருக்கிறார். இயற்பியல் துறையில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற
ஒரே நபர் இவரே. லைனஸ் பாலிங் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1954-ம் ஆண்டு
வேதியியலுக்கும் 1962-ம் ஆண்டு அமைதிக்கும் நோபல் பரிசுகளைப்
பெற்றிருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரெட்ரிக் சாங்கர் 1958-ம் ஆண்டும் 1980-ம் ஆண்டும்
வேதியியலுக்கான நோபல் பரிசுகளைப் பெற்றார். வேதியியலில் இரு முறை நோபல்
பரிசுகளைப் பெற்றவர் இவர்