
10ஆம் வகுப்பு தேர்ச்சியில் தொடர்ந்து 100 சதவீதம் அளிக்கும் இப் பள்ளி புதிய முயற்சியாக மாணவர்களுக்கு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்து அதனை மாவட்ட கல்வி அலுவலர் மூலம் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இது போன்ற நிகழ்வின் வாயிலாக மாணவ சமுதாயம் கல்வி மற்றும் இன்றி விவசாயமும் மக்களின் உயிர் நாடி என்பதனை உணர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.








