புதிதாக உருவாக்கப்பட கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஒன்றியங்களை இணைக்கக் கூடாது என அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதனால் விழுப்புரத்தில் மிக அருகில் உள்ள திருவெண்ணைநல்லூர் ,திருநாவலூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணையும் நிலை உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள இந்த இரு ஒன்றியங்களையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்திலேயே இரண்டு ஒன்றியங்களையும் வைத்திருக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர்.








