8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்க திட்டம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Wednesday, 20 February 2019

8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்க திட்டம்:

திருநெல்வேலி, ''தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச 'லேப்டாப்' வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஆடிட்டர் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. பிளஸ் 2 படித்தாலே வேலை வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கும் விதத்தில் பிளஸ் 2 வகுப்பில் கணிதவியல் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இதுவரை பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இனி எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க மத்திய அரசின் உதவி கோரியுள்ளோம். வரும் கல்வியாண்டில் ஏராளமான புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad