கால்நடைத்துறை பணி நேர்முகதேர்வு ரத்து: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Thursday, 21 February 2019

கால்நடைத்துறை பணி நேர்முகதேர்வு ரத்து:

விருதுநகர், தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இப் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். இதற்கு முதுகலை பட்டதாரிகள், பி.இ., படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு 23 ம் தேதி முதல் நேர்காணல் நடத்த அழைப்பு கடிதம் அனுப்பட்டிருந்தது.இந்நிலையில் கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் காமராஜ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு நேற்று மாலை அனுப்பிய சுற்றறிக்கை கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. நேர்காணல் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்,'' என குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் நேரம் என்பதால் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad