
How
to spot and remove the Android app that displays pop-up
ads.ப்ரவுசர்களில் வரும் பாப்அப் விளம்பரங்கள் போதாதென்று, நமது ஆண்ராய்டு
ஸ்மார்ட்போன்களிலும் தற்போது பாப்அப் விளம்பரங்கள் வந்து
கடுப்பேற்றுகின்றன.
ப்ரவுசர்களில் வரும் பாப்அப் விளம்பரங்கள் போதாதென்று, நமது ஆண்ராய்டு
ஸ்மார்ட்போன்களிலும் தற்போது பாப்அப் விளம்பரங்கள் வந்து
கடுப்பேற்றுகின்றன. அவசரமாக ஒரு அழைப்பை மேற்கொள்ள முயலும் போது விளம்பரம்
முடிய 15நொடிகள் காத்திருக்க வேண்டும் என்பதை காட்டிலும்
எரிச்சலூட்டக்கூடியது வேறென்ன உள்ளது.
பப்ஜி போன்ற கேமை சுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டிருக்கும் போது முக்கியமான
கட்டத்தில் துணி வாங்கலையோ என விளம்பரம் வந்தால் எப்படி இருக்கும். இது
போன்ற பாப்அப் விளம்பரங்களை முற்றிலும் தடுக்கும் சிலவழிகளை இங்கே
காண்போம்.


விளம்பரம் ஏதுமில்லாமல் தூய்மையாக போன் இருக்கவேண்டும் என நினைக்கும் நபராக
நீங்கள் இருந்தால், எந்த செயலிகள் விளம்பரங்களுக்கு காரணமாக இருக்கின்றன
என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அனைத்து பாப்அப் விளம்பரங்களும்
பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் சில வைரஸாகவும் இருக்கலாம் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள். எனவே விளம்பரங்களைப் பற்றிய கவலை உங்களுக்கு
இல்லையெனினும், பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

விளம்பரங்கள் தடுப்பதில் முதல்படி, அனைத்து சமீபத்திய செயலிகளையும்
மூடிவிட்டு போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். எந்த செயலியும் பின்புலத்தில்
இயங்காததை உறுதிசெய்துகொள்ளுங்கள்.கீரினீபை(Greenify) என்ற செயலியின் மூலம்
தேவையில்லாத செயலிகள் செயல்பட்டால் உள்ளதை தடுக்கலாம். இதை செய்து முடித்த
பின்னர், எப்போதிருந்து இந்த விளம்பரங்கள் வர ஆரம்பித்தன என்பதை
நினைவுகூறுங்கள். பின்னர் ப்ளேஸ்டோரில் சமீபத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட
செயலிகளின் ரிவீயுவை பார்த்து, அதில் ஏட்வேர் அல்லது மால்வேர் பில்ட்இன் ஆக
உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இதன்மூலம் அந்த செயலிகள் உங்களுக்கு தேவையா
இல்லையா என்பதை முடிவுசெய்யலாம். ஏதேனும் அப்டேட் மூலமாக ஏட்வேர்கள்
போனில் நுழையும் என்பதால் தொடர்ந்து செயலிகளை பரிசோதிக்க வேண்டும்.

விளம்பரங்களால் தொந்தரவு செய்யும் செயலிகளை கண்டறிய மற்றொரு வழியும்
உள்ளது. நோட்டிபிகேசன் பாரில் விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டால்,அதை சில
நொடிகள் அழுத்தி பிடிப்பதன் மூலம் எந்த செயலி இதை செய்கிறது என்பதை எளிதில்
அறிய முடியும். அழுத்தி பிடிக்கும் போது, 'i' ஐகான் அல்லது நோட்பிகேசனை
கையாள மூன்று ஆப்சன்களை காணமுடியும். இவற்றை கிளிக் செய்து, அந்த செயலியின்
பர்மிசன் பேஜீக்கு சென்று நோட்பிகசேன் செட்டிங்-ஐ தேவையானவாறு
மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு விளம்பரம் உங்களுக்கு காண்பிக்கப்படும்போதுஅதை மூடுவதற்கு பதிலாக, ஹோம்
பட்டனுக்கு வலதுபுறம் உள்ள ரிசண்ட் ஆப்ஸ் பகுதிக்கு செல்லுங்கள். எந்த
செயலி விளம்பரத்தை காண்பிக்கிறது என்பதை எளிதில் அறியலாம். அதை சில நொடிகள்
அழுத்திபிடிக்கும் போது தோன்றும் 'i' ஐகான் மூலம், ஆப்ஸ் பர்மிசன்களை
மாற்றிக்கொள்ளலாம்.

விளம்பரங்களை காண்பிக்கும் செயலிகளை கண்டறிந்துவிட்டால் பின்னர் சுலபம்
தான். ஆனால் சிலசமயங்களில் அந்த செயலிகளை கண்டறிவது மிகவும் கடினமாக ஒன்றாக
இருக்கும். அதை எளிதாக்குகிறது 'ஏட் டிடெக்ட் பிளக்கின்'(Ad Detect
Plugin) என்னும் இலவச செயலி. உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள
செயலிகளுக்கு 'ஏட் நெட்வொர்க்' உடன் தொடர்புள்ளதா இது கண்டறிந்து
கூறுவதால், சுலபமாக அச்செயலிகளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்யலாம்.