
பிளஸ் 2 மாணவர்களுக்கான மொழி, கலை மற்றும் தொழில்பாட தேர்வுகள் முடிவடைந்த
நிலையில், நேற்று கணினி அறிவியல் தேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில்,
12 ஆயிரத்து 112 மாணவர்கள் பங்கேற்றனர். 428 பேர் தேர்வெழுத
வில்லை.அதேபோல், நேற்று நடந்த புள்ளியியல் தேர்வில் 837 பேரும், அரசியல்
அறிவியல் தேர்வில் 40 பேரும், உயிரி வேதியியல் பாடத்தில் 35 பேரும்
பங்கேற்றனர்.கணினி அறிவியல் மாணவர்களுக்கு நேற்றுடன் கடைசி என்பதால்,
தேர்வு முடித்த கையோடு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
குழுக்களாக செல்பி எடுத்து கொள்வது, கேள்வித்தாள் பறக்க விடுவது என
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடைசியாக, பிளஸ் 2 உயிரியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை,
கணக்கியல் மற்றும் தணிக்கையியல் உட்பட தேர்வுகள் வரும், 19ம் தேதி
நடக்கிறது.திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் பள்ளி மாணவியர் கூறியதாவது:வி.
சரண்யா: ஒரு மதிப்பெண்களில் சில கேள்விகள் சுற்றிவளைத்து கேட்டிருந்தனர்.
இருப்பினும் பதிலளிக்கும் வகையிலே இருந்தது. மற்றபடி, அனைத்து கேள்விகளும்
ஈஸி. கடைசி தேர்வு என்பதால் சீக்கிரமே முடித்துவிட்டோம்.எஸ்.
சங்கீதா: ஐந்து மதிப்பெண் கேள்வியில் கடைசி கேள்வி மட்டும், 'அவுட்புட்'
கண்டுபிடிக்கும் விதத்தில் இல்லாமல், கேள்விமுறையிலே வந்திருந்தன. 'சாய்ஸ்'
வசதி இருந்ததால் மற்ற கேள்விக்கு பதிலளித்து விட்டேன்.
இருந்தாலும், மிக எளிதாக இருந்தது.ஜே. ஹரிணி: ஒரு மதிப்பெண் தவிர, 2, 3, 5
மதிப்பெண் கேள்விகள், அனைத்தும் சுலபமாக இருந்தன.
படித்த கேள்விகளே பெரும்பாலும் வந்ததால் உற்சாகமாக தேர்வை எழுதி முடித்து
விட்டேன்.வி. பவித்ரா: ஆசிரியர் குறித்துக்கொடுத்த கேள்விளே அதிகம்
வந்திருந்தன. குறைந்தது, 90 மதிப்பெண் மேல் நிச்சயம் எடுப்பேன்.
இப்பாடத்தில் அதிகளவு சென்டம் வர வாய்ப்புண்டு.