புதுடெல்லி:
இந்தியாவில் தூக்கம் குறித்து இளைஞர்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது.
தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை சுகாதார தொழில்நுட்பத்தின் சர்வதேச
தலைவர் ராயல் பிளிப்ஸ் வெளியிட்டுள்ளார்.
இதில் 38 சதவீத
இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் தூக்கம் மேம்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 31 சதவீதம் இளைஞர்கள் தூக்கத்தினை அதிகரிக்க யோகா செய்வதாக
கூறியுள்ளனர். மேலும் டெல்லி (47%), மும்பை(84), பெங்களூர்(88),
லக்னோ(70%) என குறிப்பிட்ட இடங்களில் தூக்கத்தின் அளவு குறைந்து
காணப்படுகின்றது.
இந்தியாவில் தூக்கத்தின் ஆரோக்கியம், முக்கியத்துவம் மற்றும் சதவீதத்தினை
அதிகரிக்க பிலிப்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளிலும்
500க்கும் மேற்பட்ட தூக்கத்திற்கான ஆய்வுக் கூடங்களையும், 400 தூக்கத்தில்
சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ்,
நெதர்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகளில் 11,006 பேரிடம் இது குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...